கவனம் சிதறாமல் 

கண்களை சிமிட்டாமல் 

காத்துக்கொண்டு இருந்தான் 

அவள் கைகள் என்ன வரையுமோ -அல்லது 

என்னை வரையுமோ என்று 


எண்ணங்கள் அலைபாய

அதன் வண்ணங்கள் அலையாக 

காற்றை போல அவள் கைகள் வருடியது 

கற்பனைகளை  படையலிட்டது


எங்கு இருந்தும் துவங்கவில்லை 

அவன்  நெற்றியிலிருந்து துவங்கினால் 

முத்தான ஒரு துவக்கம் 

இடமிருந்து வலம்- அவன்

தேகம் முழுவதும் அவள் படர்ந்தால் 

கற்பனைகளை அணிவகுத்தால் 


தென்றல் தீண்டிட

சாரல் அடிதிட 

கண்கள் மோதிட 

கைகள் வருடிட 

கவிதை ஒன்று பிறந்தது 


கலைமகள் தீண்டிட

காகிதமாய் இருப்பதும் 

ஒரு போதை தான் என்று உணர்ந்தான்.