Tamil Treasure

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே