கவிதையின் அழுகு வர்நனையில் மட்டுமல்ல
வாசகரின் கற்பனையிலும்தான்.
நான் என் கற்பனைக்கு மொழி வடிவம் கொடுத்தேன்
நீயோ அதை உன் கற்பனையால் ஒளிப்பதிவு செய்தாய்.
நான் என் பேனா மையால் அவள் கண்களுக்கு மை தீட்டினேன்
நீயோ உன் கற்பனை தீயில் மெருகெர மை செய்து அவள் கண்களை திட்டமிட்டு தீண்டினாய்.
பேனா மையை வார்த்தைக்கு ஒன்றாக மாற்றி அவள் இதழ்களுக்கு சாயம் பூசினேன்
கற்பனையில் காதல் சமைத்து பூவிதழாலே அவளிதழிற்க்கு நீ சாயம் பூசினாய்.
கவிதையும் கற்பனையும் இவ்வாறு மோதிக்கொள்ள
காதல் மட்டும் கவலையின்றி
காற்று வாங்கிக்கொண்டிருந்தது.